உலக இரத்த ஒட்டுண்ணி நோய் நாள்
உலக இரத்த ஒட்டுண்ணி நாள் (World Chagas Disease Day) என்பது இரத்த ஒண்டுண்ணி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏப்ரல் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது முதன்முதலில் ஏப்ரல் 14, 2020 அன்று கொண்டாடப்பட்டது. மேலும் ஏப்ரல் 14, 1909 அன்று முதன் முதலில் இந்நோயைக் கண்டறிந்த பிரேசிலிய மருத்துவர் கார்லோசு ரிபேரோ ஜஸ்டினியானோ சாகசின் பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது.[1][2][3][4] உலக இரத்த ஒட்டுண்ணி நோய் நாள் மே 24, 2019 அன்று உலக சுகாதார சபையின் 72வது அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் மே 28, 2019 அன்று உலக சுகாதார சபையின் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[5][6][7][8] உலக இரத்த ஒட்டுண்ணி நோய் நாளின் முன்மொழிவு இரத்த ஒட்டுண்ணி நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பால் நிறுவப்பட்டது. மேலும் பல சுகாதார நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளால் ஆதரிக்கப்பட்டது.[9]
"உலக அளவில் அனுசரிக்கப்படும் வருடாந்திர நாள் இந்நோய் குறித்த பன்னாட்டுக் கவனத்தை ஈர்க்கும்" என்று உலக சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் பெட்ரோ அல்பஜார் வினாசு கூறினார்.[10] "இந்த நாட்கள் பார்வையை வழங்க உதவுவதோடு, பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட, ஆனால் இன்னும் பல நாடுகளில் இருக்கும் ஒரு நோய்க்கான கட்டுப்பாட்டுத் தலையீடுகளை மேம்படுத்த நாடுகளை அர்ப்பணிக்க உதவும்." உலக இரத்த ஒட்டுண்ணி நோய் நாளினை கொண்டாடுவது இந்த நோய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.[11]
உலக காச நோய் நாள், உலக சுகாதார நாள், உலக மலேரியா நாள், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக புகையிலை எதிர்ப்பு தினம், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக கல்லீரல் அழற்சி நாள், உலக நோயாளி பாதுகாப்பு நாள், உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் மற்றும் உலக எய்ட்ஸ் தினம் போன்ற உலக சுகாதார அமைப்பு மூலம் அறிவிக்கப்பட்ட 11 அதிகாரப்பூர்வ உலகளாவிய பொதுச் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்களில் உலக இரத்த ஒட்டுண்ணி நாளும் ஒன்றாகும்.[12][13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World Chagas Disease Day 2020". www.who.int (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "World Chagas Disease Day highlights 'silent and silenced' tropical illness". UN News (in ஆங்கிலம்). 2020-04-14. பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "Snakebites And Kissing Bugs Among Surprise Items On World Health Agenda". NPR.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "Celebrating World Chagas Day for the First Time to Help Give Visibility to This Neglected Disease". ISGlobal (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "World Health Assembly Update, May 24". www.who.int (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "World Chagas Disease Day: Know About This Parasitic Ailment That Targets Society's Most Vulnerable". The Weather Channel (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "Celebrating World Chagas Day for the First Time to Help Give Visibility to This Neglected Disease". ISGlobal (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ "WHO | World Chagas Disease Day: raising awareness of neglected tropical diseases". WHO. Archived from the original on October 18, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ World Chagas Disease Day: raising awareness of neglected tropical diseases. (2020, March 30). Retrieved from https://www.who.int/neglected_diseases/news/world-Chagas-day-approved/en/

- ↑ WHO global health days. Retrieved from https://www.who.int/campaigns
- ↑ World Chagas Disease Day: raising awareness of neglected tropical diseases. (2020, March 30). Retrieved from https://www.who.int/neglected_diseases/news/world-Chagas-day-approved/en/